1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 ஆகஸ்ட் 2019 (10:44 IST)

44 நாட்களில் அத்திவரதர் வசூலித்த காணிக்கை எவ்வளவு தெரியுமா?

அத்திவரதர் கடந்த 44 நாட்களாக தரிசித்த பக்தர்கள் எவ்வளவு காணிக்கை செலுத்தி உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  
 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அவரை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 
 
ஜூலை 31 ஆம் தேதி வரை சயனகோலத்தில் காட்சித் தந்த அத்திவரதர், ஆகஸ்து 1 ஆம் தேதியிலிருந்து நின்ற கோலத்தில் காட்சித் தந்து வருகிறார். வருகிற 17 ஆம் தேதி மீண்டும் குளத்திற்குள் செல்கிறார். 
இன்னும் 2 நாட்களில் தரிசனம் முடிய உள்ள நிலையில், தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 5 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதேபோல், கடந்த 44 நாட்களில் அத்திவரதர் கோவிலில் ரூ.6 கோடியே 81 லட்ச ரொக்க பணமாக உண்டியலில் போடப்பட்டுள்ளது. இதை தவிர்த்து 87 கிராம் தங்கமும், 2507 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.