வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 29 ஜூலை 2017 (07:13 IST)

பிக்பாஸ் வீட்டில் வடிவேல், சந்தானம் இருக்க வேண்டும். அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் தமிழகத்தை அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசினார்.



 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க நேரம் கிடைக்கவில்லை என்று கூறிய அஸ்வின், இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸ்களை பார்த்து வருவதாக குறிப்பிடார். 
 
தான் பிக்பாஸ் வீட்டுக்கு அழைக்கப்பட்டால், சந்தானமும், வடிவேலும் கூட இருந்தால் ஓகே என்று கூறிய அஸ்வின், ஆனால் இவர்கள் இருவருமே பிசியாக இருப்பதால் அதற்கு சம்மதிப்பார்களா? என்று கேள்வி எழுப்பினார். 
 
மேலும் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரீஎண்டர் ஆவது குறித்து அவர் கூறியபோது, '``ரெண்டு வருஷ இடைவெளி, சி.எஸ்.கே-வோட பலத்தை அதிகரிச்சிருக்குன்னு நினைக்கிறேன். சென்னை, தமிழ்நாடு, இந்தியா எல்லாம் தாண்டி உலகம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் சி.எஸ்.கே-வின் ‘கம்-பேக்’கை எதிர்பார்த்திருக்காங்க. நிச்சயம் நல்ல ஒரு கம்பேக்கா இருக்கும்னு நம்புறேன்.”என்று கூறினார்.