வியாழன், 16 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 3 ஜனவரி 2026 (08:58 IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. தென்மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. 
 
இதன்படி தாம்பரம் - நாகர்கோவில் (ஜனவரி 12, 19), செங்கல்பட்டு - தென்காசி (ஜனவரி 09, 16), சென்னை - கோவை (ஜனவரி 12, 19), மற்றும் சென்னை - போத்தனூர் (ஜனவரி 14, 21) ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. மேலும், சென்னை - தென்காசி (ஜனவரி 09) மற்றும் சென்னை - மங்களூரு (ஜனவரி 14) ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்ப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கூடுதல் ரயில்களாகப் போத்தனூர் - செங்கோட்டை இடையே ஜனவரி 13-ம் தேதி ஒரு பயணமும், தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே ஜனவரி 14 மற்றும் 21-ம் தேதிகளில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து ரயில்களும் அந்தந்த ஊர்களிலிருந்து மறுமார்க்கமாகவும் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொங்கல் விடுமுறை காலத்தில் சொந்த ஊர் செல்பவர்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க இது பெரும் உதவியாக இருக்கும்.
 
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran