முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு டாக்டர் பட்டம்

Last Modified செவ்வாய், 15 அக்டோபர் 2019 (20:44 IST)
தமிழக 'முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
இந்த பல்கலைக்கழகத்தின் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்த தகவலை டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் ஏ.சி.சண்முகம் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

டாக்டர் ஏ.சி.சண்முகம் சமீபத்தில் நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி ஆதரவில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க இருக்கும் அறிவிப்பு வெளியானதை அடுத்து அதிமுக தொண்டர்கள் உற்சாகமாகி இதனை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :