திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 23 மார்ச் 2017 (23:27 IST)

அசோகமித்ரனுக்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்ரனின் மறைவிற்கு தமிழ் எழுத்தாளர்கள் அனைவருமே இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் அவருடைய எழுத்துக்களுக்கு பெரிய ரசிகனான உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


 


கமல்ஹாசன் தனது டுவிட்டரில், 'திரு. அசோகமித்ரனின் எழுத்து அவர் காலமும் கடந்து வாழும். அவரை வாசித்து நேசித்து சந்தித்த பெருமை பெற்றவன் நான் .நனறி அமரர் அனந்துவிற்கு' என்று பதிவு செய்துள்ளார். எழுத்தாளர் அசோகமித்ரனை மறைந்த இயக்குனர் அனந்துதான் கமல்ஹாசனுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நடிகர் கருணாகரன், எழுத்தாளரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான திலகவதி உள்பட பலர் தங்களுடைய டுவிட்டரில் அசோகமித்ரனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.