செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (11:10 IST)

அரவிந்த்சாமி பொண்டாட்டி எங்கே?: ரசிகருக்கு கூலான நெத்தியடி!

அரவிந்த்சாமி பொண்டாட்டி எங்கே?: ரசிகருக்கு கூலான நெத்தியடி!

நடிகர் அரவிந்த் சாமி, கமல் போன்றோர் தற்போது சமூக வலைதளமான டுவிட்டரில் அதிகமாக கருத்துக்கள் கூறி வருகின்றனர். அரசியல் சூழல்களில் அவர்கள் போடும் பதிவு அதிகமாக பேசப்பட்டு விவாதிக்கப்படுகிறது.


 
 
இந்நிலையில் சமீபத்தில் அவர் போட்ட பதிவு ஒன்றுக்கு ஒருவர் அரவிந்தசாமியிடம் அவரது பொண்டாட்டி எங்கே என அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேட்டார் அதற்கு அரவிந்த்சாமி கூலாக நெத்தியடி பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.

 
சுப்பிரமணியன் சாமி நடிகர் கமலை விமர்சித்த நேரத்தில் அரவிந்த்சாமி தனது டுவிட்டரில் ஒரு புதிரை போட்டார். அவர் யாரை சொல்கிறார் என்பதை நெட்டிசன்கள் புரிந்தும் புரியாமல் குழம்பியும் இருந்தனர்.


 
இந்நிலையில் ஒருவர் அரவிந்த்சாமியிடம் உன் பொண்டாட்டி எங்க? உங்கப்பன் உண்மையான பெயர் என்ன? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த அரவிந்த்சாமி என் பொண்டாட்டி அவ புருஷனோட இருக்கா, எங்கப்பா உயிரோட இருந்தா கேட்டு சொல்லிருப்பேன். நாட்டுக்கும் இதுக்கும் என்னப்பா சம்மந்தம் என கூலாக பதில் அளித்தார் அரவிந்த்சாமி.