1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (15:04 IST)

மதுரையை அடுத்து தஞ்சைக்கும் உள்ளூர் விடுமுறை.. எந்த தேதியில் தெரியுமா?

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் ஏப்ரல் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மதுரையை அடுத்து தஞ்சாவூருக்கும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தீபக் என்பவர் தெரிவித்துள்ளார்.

 உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 18 நாட்கள் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும் ஏப்ரல் 20-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சி தலைவர் தீபக் அறிவித்துள்ளார்

இந்த விடுமுறைக்கு பதிலாக வேறு எந்த நாளில் வேலை நாளாக இருக்கும் என்பது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Edited by Mahendran