வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2017 (15:52 IST)

ஜெ. மரணம் குறித்த விளக்கம்: மருத்துவர்களின் மாறுபட்ட கருத்தால் குழப்பம்!

ஜெ. மரணம் குறித்த விளக்கம்: மருத்துவர்களின் மாறுபட்ட கருத்தால் குழப்பம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள், வதந்திகள் பரவி வந்தது.


 
 
இதனை தடுக்க இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலே, மருத்துவர், பாலாஜி, பாபு உள்ளிட்ட மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.
 
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் நேற்று மாலை உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று நடைபெற உள்ள பிரஸ் மீட் குறித்து ஆலோசிப்பதற்கும், பிரஸ் மீட்டில் என்ன பேச வேண்டும் என்பது குறித்து பேசுவதற்காக தான் நடராஜன் அப்பல்லோ அனுமதிக்கப்பட்டுள்ளார் என பலரும் விமர்சனம் வைத்தனர்.
 
இந்நிலையில் இன்று நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஏன் இவ்வளவு தாமதமாக பிரஸ் மீட் செய்கிறீர்கள் என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த பாலாஜி, டாக்டர் ரிச்சர்ட் இன்று சென்னையில் ஒரு நிகழ்வில் பங்கேற்க வந்தார். அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த நிபுணர் என்பதால் அவரும் இருக்கும்போது பிரஸ் மீட் செய்யலாம் என்பதால் இன்று பிரஸ் மீட் செய்கிறோம். அரசு தரப்பில் இருந்து எங்களுக்கு பிரஸ் மீட் செய்ய எந்த அழுத்தமும் வரவில்லை என்றார்.
 
ஆனால் மற்றொரு கேள்வியின் போது பதில் அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலே இந்த பிரஸ் மீட் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதே தவிர, அப்பல்லோவால் கிடையாது என்று போட்டு உடைத்தார். மருத்துவர்களின் இந்த மாறுபட்ட கருத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரஸ் மீட்டின் நம்பகத்தன்மையே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.