செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2016 (15:44 IST)

கருணாநிதியை போல் திருமணம் செய்யவில்லை: அன்வர் ராஜா ஆவேசம்

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அதிமுகவை சேர்ந்த அன்வர் ராஜா சமீபத்தில் 35 வயது வடமாநில பெண் ஒருவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டது.


 
 
71 வயதில் இவருக்கு திருமணம் தேவையா என பலரும் பேசினர். முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இரண்டாவது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் மூன்றாவது மனைவியை சட்டப்பூர்வமாக திருமணம் செய்திருக்கிறார் இதில் என்ன தவறு என அவரது ஆதரவாளர்கள் பேசுகின்றனர்.
 
இந்த திருமணம் குறித்த சர்ச்சைகளுக்கு தன் நண்பர்களிடம் கூறிய அன்வர் ராஜா, 71 வயதானாலும் இளமையாகத்தான் இருக்கிறேன், அதற்கு காரணம் தமிழ் இலக்கியம் படிக்கும் பழக்கம்தான் என்று கூறினாராம்.
 
மேலும் இந்த மூன்றாவது திருமணம் இஸ்லாமிய சட்டப்படி செய்த திருமணம். கருணாநிதி செய்தது போன்று சட்டப்பூர்வமில்லாத திருமணம் இல்லை என்றாராம்.