வெள்ளி, 23 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (17:19 IST)

ஆளுனர் மோசமாக நடந்து கொண்டார்: வாய்தவறி உளறிய அண்ணாமலை..!

Annamalai
சட்டமன்றத்தில் ஆளுநர் மோசமாக நடந்து கொண்டார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாய்தவறி உளறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
சட்டமன்றத்தில் சபாநாயகர் மோசமாக நடந்து கொண்டார் என்று கூறுவதற்கு பதிலாக ஆளுநர் மோசமாக நடந்து கொண்டார் என்று  அண்ணாமலை கூறியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  
 
சபாநாயகர் அவர்கள் முறை தவறி நடந்து கொண்டதன் காரணமாக ஆளுநர்  அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக நான் பார்க்கிறேன். இப்போது சபாநாயகர் மாற்றி பேசலாம்,  ஜனகன போடுகிறோம், அதற்கு முன்னாடியே போய்விட்டார் என்று ஆனால் சபாநாயகர் அவர்களுக்கு எந்தவித பிசினஸும் கிடையாது,  கவர்னர் சொல்வது சரியா தவறா என்பதை சபையில் உள்ள உறுப்பினர்கள் ஆய்வு செய்ய வேண்டும் , அவை குறிப்பில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை உறுப்பினர்கள் பக்கம் ஆலோசிக்க வேண்டும்.
 
சபாநாயகர் என்பவர் ஒரு நடுநிலையானவர். அவர் திமுகவின் உறுப்பினர் கிடையாது. ஆனால் திமுகவின் உறுப்பினர் போய் மோசமாக சபாநாயகர் நடந்து கொண்டார் என்று கூறுவதற்கு பதிலாக ஆளுநர் அவர்கள் நடந்து கொண்டார் என்று அண்ணாமலை கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Mahendran