திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (15:45 IST)

திமுக டெபாசிட் இழக்கும் முதல் தொகுதி கோவையாக இருக்கும்: அண்ணாமலை

Annamalai
திமுக டெபாசிட் இழக்கும் முதல் தொகுதி கோவையாகத்தான் இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருவருமே அண்ணாமலையை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதியோடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் நேற்று அண்ணாமலை இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார் 
 
இரவு 10 மணிக்கு மேல் மைக்கை எடுத்து பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதுதான் விதி தவிர வேட்பாளர் மக்களை சந்திக்கக் கூடாது என்று எந்த விதியும் இல்லை என்று அவர் கூறினார் 
 
ஆவாரம்பாளையம் பகுதியில் காவல்துறை அனுமதி அளித்த இடங்களுக்கு தான் நான் சென்றேன் என்றும் பத்து மணிக்கு மேல் நான் மைக்கை எடுத்து பிரச்சாரம் செய்திருந்தால் அது குறித்த வீடியோவை காட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். 
 
மேலும் திமுக டெபாசிட் இழக்கும் முதல் தொகுதி என்றால் அது கோவை தொகுதியாக தான் இருக்கும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். 
 
Edited by Mahendran