வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (14:26 IST)

கோவை புறக்கணிக்கப்பட்டது உண்மை தான் - அண்ணாமலை

திமுக ஆட்சி அமைந்த ஒரு மாத காலத்தில் கோவை மாவட்டம்  புறக்கணிக்கப்பட்டது உண்மைதான் என்று பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

 
கோவை பொண்ணையராஜபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய "மோடி கிட்டை" பாஜக மாநிலத்துணைத்தலைவர்  அண்ணாமலை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் முழு மூச்சாக தடுப்பூசி போட்டபோது அரசியல் கட்சியினர் குறைகூற ஆரம்பத்ததும்,தேர்தல் காரணமாக இரு மாதங்கள் தடுப்பூசிகள் வீணாகின என்றும் தமிழகத்தில் தடுப்பூசிகள் வீணாவது  17 சதவீத்ததிலிருந்து ஐந்து சதவீத  குறைந்துள்ள நிலையில்  இருந்தாலும் இந்தியாவில் தொடர்ந்து தடுப்பூசிகள் வீணாகி வருகின்றன என கூறினார்.ஏழு நாட்களில் ஒரு மாநிலம் எவ்வளவு தடுப்பூசி போட்டுள்ளது, எவ்வளவு  வீணாகியுள்ளது,எவ்வளவு கொரோனோ தொற்று என்பதை பொறுத்து மத்திய அரசு தடுப்பூசிகளை ஒதுக்கி வருவதாகவும், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமானதிலிருந்து தற்போது தடுப்பூசிகள் அதிகமாக வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த மாதம் 43 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது என்றும் இதுதொடர்பாக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மத்திய  அரசிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.  
 
ஜூலை 21-ம் தேதி முதல் மத்திய அரசே தடுப்பூசிகளை நேரடியாக விநியோகிக்கும் எனவும் தெரிவித்த அண்ணாமலை, கோவையை வேறு மாவட்ட  பார்ரக்கக்கூடாது, தொழில்துறை அதிகம் நிறைந்த கோவையில் நோய் பரவும் தன்மை அதிகம் உள்ளது. கடந்த மூன்று நாட்களாக கோவையில் அதிகபடியான இறப்பு பதிவாகி வருகிறது  எனவும் ஒன்றரை மாதமாக தத்தளித்து வரும் கோவைக்கு அரசியல் காழ்புணர்ச்சி இல்லாமல் அதிக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 
2006-2010 வரை முதல்வராக  கருணாநிதி மத்திய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.10 வருடங்களுக்கு பிறகு  ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள திமுக அரசு புதிதாக ஒன்றிய அரசு என்ற புது வார்த்தையை  ஆரம்பித்துள்ளார்கள் எனவும் தமிழ்நாடு தமிழகமா, ஒன்றிய அரசா மத்திய அரசா என்பதெல்லாம் தேவையில்லாத பேச்சு என கூறிய அண்ணாமலை, நிதி அமைச்சர்,சுகாதாரத்துறை  அமைச்சர் அவரவர் துறைகளை பேசமால் வேறு துறைகளை பற்றி பேசி வருவதாகவும் 2006லிருந்து 2010 வரை கருணாநிதி மத்திய அரசு என கூறியதை இந்த திமுகவினர் தவறு என  கூறுகிறார்களா? கருணாநிக்கு தெரியாத சட்டம்,அரசியலமைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டதா? மக்களை திசை திருப்பவுதைதான் பார்க்கிறேன் எனவும் கூறினார்.
 
திமுகவின்  ஆரம்பகாலமான கடந்த ஒரு மாதகாலமாக கோவை புறக்கணிக்கப்பட்டது உண்மைதான். இப்போதை பிரச்சனை துவங்கியவுடன்   தடுப்பூசி தருகின்றனர் எனவும் மேலோட்டமாக பார்ப்பதற்கு  ஒரு காழ்ப்புணர்ச்சி உள்ளது எனவும் கூறிய அண்ணாமலை, ஸ்டாலின் அனைவருக்கும் ஆன முதல்வர் என கூறுகிறார் ஆனால் நிதி அமைச்சர்,செய்தி தொடர்பாளர்களோ  தொலைக்காட்சியில் பேசும் போது மோடியிடம் கேளுங்கள் என கூறுவதாகவும் கோவையில் எங்களுக்காக ஓட்டு போட்டார்கள் என கேட்பதாகவும் உண்மையில் முதல்வர் அவர்களுக்கு  அமைச்சர்கள் மீது முழு கன்ரோல் உள்ளதா என்ற குழப்பம் வருவதாக தெரிவித்த அண்ணாமலை, குறிப்பாக முதல்வர் மத்திய அரசுடன் இணக்கமாக செல்வதாக பேசி வரும் நிலையில் நிதி  அமைச்சர் பி.டி.ஆர் ஜி.எஸ்.டி கவுன்சில் பேசிய இன்னும் எதிர்கட்சியாகவே பேசி வருவதை காட்டுவதாகவும் இதனால் தமிழக மக்கள் தான் பாதிக்கப்படுவர் எனவும் இதை வேகமாக  மாற்றிக்கொள்ளும் கட்டாயத்தில் உள்ளோம் எனவும் தெரிவித்தார்.