திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 மே 2023 (17:24 IST)

மல்யுத்த வீராங்கனைகள், எந்த ஆதாரங்களையும் இதுவரை அளிக்கவில்லை – அண்ணாமலை

மல்யுத்த வீராங்கனைகள் எந்தவிதமான ஆதாரத்தையும் அளிக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பாஜக அமைச்சர் மீது குற்றம் சாட்டிய நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். அப்போது மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் குற்றச்சாட்டு கூறியவுடன் குற்றச்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது அவ்வாறு செய்தால் சட்டம் கேள்விக்குறியாகும்
 
புகார் அளிக்க அனைவருக்கும் அனுமதி உண்டு ஆனால் விசாரணை நடத்தி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், மல்யுத்த வீராங்கனைகள் இன்னும் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறியுள்ளார்
 
Edited by Siva