செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 ஜனவரி 2022 (20:22 IST)

பொங்கல் தொகுப்பு கொடுத்ததற்கு பதில் இப்படி செய்திருக்கலாம்: அண்ணாமலை

பொங்கல் தொகுப்பு கொடுப்பதற்கு பதிலாக மக்களின் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி இருக்கலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்
 
பொங்கல் தொகுப்பின் எல்லா பொருள்களிலும் கமிஷன் வாங்கி உள்ளனர் என்றும் இதற்கு பதிலாக மக்களின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை போட்டு இருக்கலாம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார் 
 
பொங்கல் தொகுப்பாக ரேஷனில் தரப்பட்ட வெல்லத்தை யாராவது பயன்படுத்தியிருந்தால் விவசாய அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும் என்றும் எல்லா பொருட்களுக்கும் கமிஷன் வாங்கி உள்ளனர் என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.