வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (10:05 IST)

ஆதீனத்தை தொட்டால் மோடி என்ன செய்வார் என தெரியுமா? அண்ணாமலை எச்சரிக்கை

Madurai Adheenam
ஆதீனத்தை  தொட்டால் மோடி என்ன செய்வார் தெரியுமா என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக மதுரை ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்களை திமுக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் குறிப்பாக அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு மதுரை ஆதீனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது 
இந்த நிலையில் மதுரை ஆதீனத்தை தொட்டுப் பாருங்கள் என்றும் அப்படி தொட்டால் மோடி என்ன செய்வார் என எனக்கு தெரியும் என்றும் அமைச்சர் சேகர் பாபுவுக்கு சவால் விடுக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்ட பயனாளிகள் கண்டறிவதாக மக்களை திமுக அரசை ஏமாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்
 
மேலும்  70 அதிகாரிகளை நம்பி அண்ணாமலை அரசியல் செய்யவில்லை என்றும் மக்களை நம்பி அரசியல் செய்கிறார் என்றும் அதிகாரிகளை மாற்றினாலும் திமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்த அண்ணாமலை பணி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்