வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2024 (07:24 IST)

2026 தேர்தலுக்கு பின் ஒரு திராவிட கட்சி காலியாகிவிடும்: அண்ணாமலை

"2026 ஆம் ஆண்டின் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் உள்ள ஒரு திராவிடக் கட்சி 12 சதவீதத்தில் குறைவான வாக்குகள் பெற்று காலியாகிவிடும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, தமிழகத்தில் இரண்டு முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், ஒன்று உதயநிதி துணை முதல்வராக ஆனது, இன்னொன்று நடிகர் விஜய் புதிதாக அரசியலுக்கு வந்தது என்றும் தெரிவித்தார். உதயநிதி துணை முதல்வர் ஆனதிலிருந்து, ‘நாங்கள் செய்வது குடும்ப அரசியல்தான்’ என்பதை எந்தவித கூச்சமும் இன்றி திமுக தெளிவாக காட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஒருவர் பதவியை பெறுவதற்கு 10 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகள் களத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்ற நிலையை உதயநிதியின் பதவி உயர்வு உடைத்து விட்டது என்றும், உதயநிதி தனித் திறமையால் எம்எல்ஏ ஆனார் என்பதை ஏற்க மாட்டேன்; அந்த தொகுதியில் திமுக சார்பில் யாராவது போட்டியிட்டிருந்தாலும் வெற்றி பெற்றிருப்பார் என்றும் தெரிவித்தார்.

விஜய் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன். அவர் ஒரு மாஸ் நடிகர் மட்டுமல்ல; திரை உலகில் உச்சத்தில் இருப்பவர், இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள் கூறி வரவேற்கிறேன். இது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக குறித்த விஜய்யின் மனநிலை மாற வாய்ப்புள்ளது. தமிழக அரசியலில் பாஜக காலம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. 2026 என்பது கூட்டணி ஆட்சி தான்; ஒரு திராவிடக் கட்சி 12 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்று காலியாகிவிடும்; 2031 இல் தமிழகத்தின் திராவிடக் கட்சிகளுக்கு வேலை இருக்காது என்றும் அவர் கூறினார்."



Edited by Siva