1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Anna University Student Sexual Assault Case: Accused Found Guilty on All Charges

ஞானசேகரன் குற்றவாளி.. அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு..

பாலியல் வன்கொடுமை
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2023 டிசம்பர் 23 ஆம் தேதி இரவு, ஒரு  மாணவி தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஓர் நபர் இருவரையும் அச்சுறுத்தி, மாணவனை விரட்டிய பிறகு மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை நிகழ்த்தினார்.
 
இந்த கொடூர சம்பவம் கல்வி நிறுவனத்துக்குள்ளேயே நடந்ததால், அது தமிழகமெங்கும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. பின்னர் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்துறை நடத்திய விசாரணையில், அடையாறு பகுதியில் உணவகம் நடத்தி வந்த 37 வயதுடைய ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
 
ஏப்ரல் 23 முதல் தினசரி விசாரணைகள் நடைபெற்றன. பாதிக்கப்பட்ட மாணவியுடன் சேர்த்து மொத்தம் 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கில், அனைத்து தரப்புகளின் வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து, அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
இந்த தீர்ப்பு 11 பிரிவுகளிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு தண்டனை ஜூன் 2ல் அறிவிக்கப்பட உள்ளது. 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
கமல்ஹாசன் உள்ளே.. வைகோ வெளியே.. 4 திமுக மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் பட்டியல்: