அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை: தமிழக அரசு கடிதம்!
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தரலாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே. சூரப்பா மத்திய மனித வளத் துறைக்கு எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிறப்பு அந்தஸ்து விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் தமிழ்க அரசிடம் சொன்னதையே கடிதமாக எழுதினேன் என துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்த நிலையில் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களும் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. உயர் சிறப்பு அந்தஸ்து குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது என்பதும் இந்த குழுவில் அமைச்சர்கள் அன்பழகன், செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகியோர் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு எழுதிய கடிதம் காரணமாக அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காது என்றே கருதப்படுகிறது