1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 30 ஜனவரி 2017 (16:12 IST)

ஏன் எப்போதும் என்னையே வச்சி செய்றீங்க? - அனிருத் அழுகை

தன்னுடைய பெயரில் சமீபத்தில் வெளியான ஆபாச வீடியோ பற்றி இசையமைப்பாளர் அனிருத் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
இசையமைப்பாளர் அனிருத் ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஒரு வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
 
இசை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு சென்றிருக்கும் அவர், தனது ரசிகை ஒருவருடன் அந்தரங்கமாக இருந்தார் எனவும் செய்திகள் பரப்பப்பட்டது. 
 
அது அவர் இல்லை எனவும், இது போன்ற வீடியோக்களை நம்ப வேண்டாம் எனவும் அவரின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனாலு, அது அவர்தான் என சத்தியம் செய்யும் நெட்டிசன்கள், முகநூல் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலம் அந்த வீடியோவை மற்றவர்களுக்கு பரப்பி வருகிறார்கள்.  
 
இந்நிலையில், ஒரு பிரபல வாரப் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அனிருத் “வதந்தி பரப்புவர்களிடம் ஏன் எப்போதும் என்னையே வெச்சு செய்றீங்கனு கேட்கனும். அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. வதந்தியை பரப்பியவர்கள் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.