புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 மார்ச் 2023 (08:02 IST)

சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி: அன்புமணி ராமதாஸ்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 
 
2016 ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிலையில் பாமக தேர்தலை சந்தித்தது. ஆனால் அந்த தேர்தலில் பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இடம் பெற்று 5 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. 
 
இந்த நிலையில் பாமக 2026 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமைய வேண்டும், அந்த கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 
 
பாமக 1991 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் பாமக போட்டியிட்டு வருகிறது என்றதும் ஆனால் இதுவரை தனித்தோ அல்லது தனி கூட்டணியாக அமைத்து போட்டியிட்டு அக்கட்சி பெரிய வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva