திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2024 (13:09 IST)

சமூகநீதி என்றால் என்ன என்று ஸ்டாலினுக்கும் தெரியாது, உதயநிதிக்கும் தெரியாது: அன்புமணி

சமூக நீதி என்றால் என்ன என்று ஸ்டாலினுக்கும் தெரியாது, அவரது மகன் உதயநிதிக்கு தெரியாது, எடப்பாடி பழனிச்சாமிக்கு சுத்தமாக தெரியாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார் அப்போது ’இந்த தேர்தல் நமக்கு மிகவும் முக்கியமான தேர்தல் என்றும் மூன்றாம் முறையாக பிரதமர் மோடி என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றும் எனவே இந்த தொகுதியில் போட்டியிடும் திலகபாமா வெற்றி பெற்றால் இந்த தொகுதிக்கு நல்லது கிடைக்கும் என்றும் அவர் பாரத பிரதமரிடம் இந்த தொகுதிக்கான திட்டங்களை உரிமையுடன் கேட்டு பெற்று தருவார் என்றும் தெரிவித்தார்.

சமூக நீதி என்றால் என்னவென்று ஸ்டாலினுக்கு தெரியாது, அவரது மகன் உதயநிதிக்கு தெரியாது என்று அன்புமணி கூறினார். மேலும் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு கேள்வியை நான் முன்வைக்க விரும்புகிறேன். அதிமுகவை சேர்ந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு ஏன் அவர் முன்னுரிமை அளிக்கிறார்? உங்களது அமைச்சரவையில் இருக்கும் செந்தில் பாலாஜி, முத்துச்சாமி, சேகர்பாபு , ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் போன்றவர்கள் அதிமுகவிலிருந்து வந்தவர்கள், அவர்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கிறீர்கள்? என்ன காரணம் உங்கள் கட்சியில் திறமையானவர்கள் இல்லையா என்று தெரிவித்தார்.

Edited by Mahendran