1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (15:27 IST)

தமிழகத்தில் மறுதேர்தல், ஜனாதிபதி ஆட்சி: ஆனந்த் ராஜ்!!

மக்கள் விரும்பும் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி மறு தேர்தல் நடத்த வேண்டும் நடிகர் ஆனந்த் ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.


 
 
ஜெயலலிதா இறந்த பிறகு நடிகர் ஆனந்த் ராஜ் அதிமுக கட்சியை விட்டு வெளியேறினார். நடிகர் ஆனந்தராஜ் சசிகலா தலைமையை ஏற்க முடியாது என்று கட்சியில் இருந்துவிலகினார். 
 
தற்போது தமிழக அரசியலில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி செயல்பட்டு வரும் நிலையில் ஆனந்தராஜ், தமிழக மக்கள் விரும்புபவர் தான் தமிழக முதலமைச்சராக வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
அதனால் தமிழகத்தில் உடனடியாக குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும். குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தி மறுதேர்தல் நடத்த வேண்டியது அவசியம் என்றார்.  பணம் செலவாகும் என்றாலும், தமிழக மக்களின் நலன் கருதி மறு தேர்தல் நடத்த வேண்டும் என ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.