வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 23 ஜூலை 2016 (15:16 IST)

அந்தமான் சென்றபோது மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரம்

சென்னை, தாம்பரத்திலிருந்து  29 பேருடன் அந்தமானுக்கு புறப்பட்டு, நடுவில் மாயமான விமானத்தை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 


 

 
நேற்று காலை விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 விமானம், தாம்ரம் விமானப்படை விமானதளத்தில் இருந்து அந்தமான புறப்பட்டது. பொதுவாக விமானம் பறந்துக் கொண்டிருக்கும் போது அருகில் இருக்கும் கட்டுபாட்டு அறையுடன் தொடர்பில் இருக்கும்.  
 
ஆனால் இந்த விமானம் காலை 8.00 மணிக்கு மேல் எந்த கட்டுபாட்டு அறையுடனும் தொடர்பில் இல்லை என்பதால், நடுவானில் விமானம் காணமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த விமானத்தில் 29 பேர் கொண்ட குழு விமானத்தில் பயணித்துள்ளனர். தற்போது இந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். 
 
விமானம் புறப்பட்ட சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, கட்டுபாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் திசை மாறிச் சென்று விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
 
மாயமான விமானத்தை தேடும் பணியில், இந்திய விமானப்படையின் 5 விமானங்கள் மற்றும் கடலோர காவல்படையின் 13 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் ஆகியவை ஈடுபட்டுள்ளன. தமிழக கடலோர காவல் படையும் இப்பணியில் இணைந்துள்ளது.
 
இந்நிலையில், தேடுதல் பணியை துரிதப்படுத்துவதற்காக பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பரிக்கர் டெல்லியில் இருந்து இன்று தாம்பரம் விமானப்படை தளத்தை வந்தடைந்தார்.
 
தேடுதல் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர் ராணுவ அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். அதன்பின், அங்கிருந்து விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடந்துவரும் வங்காள விரிகுடா கடல் பகுதியை அவர் பார்வையிட்டார்.