ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (07:28 IST)

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்களின் சிறையில் செல்போன்.. பெரும் பரபரப்பு..!

jail
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் சிறையில் செல்போன் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக முதலில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

அதனை அடுத்து அடுத்தடுத்து கைது நடவடிக்கை தொடர்ந்த நிலையில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் 11 பேர்களின் சிறை அறைகளில் சோதனை செய்தபோது செல்போன் மற்றும் சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 3 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிறையில் இருக்கும் கைதிகளுக்கு செல்போன் சிம் கார்டுகளை கொண்டு வந்து கொடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

பூந்தமல்லி தனி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 11 பேர் அறையில் செல்போன் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் இந்த வழக்கில் இன்னும் சில குற்றவாளிகள் வெளியில் இருப்பதாக சந்தேகம் கொள்ளப்படுகிறது.

Edited by Siva