ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2024 (18:21 IST)

டிடிவி-யை எதிர்த்து நான் போட்டியிடவில்லை; என்னை எதிர்த்துதான் அவர் போட்டியிடுகிறார்: தங்க தமிழ்ச்செல்வன்

தேனி தொகுதி திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள அமமுக வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிடஉள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டிடிவி தினகரன் அமமுகவில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இணைந்த நிலையில் தற்போது அவரையே எதிர்த்து போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார் 
 
அவர் கூறிய போது டிடிவி  தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறாரா? இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த தேர்தலில் எனக்கு எந்த ஒரு சவாலும் இல்லை. டிடிவி தினகரனை எதிர்த்து நான் போட்டியிடவில்லை, என்னை எதிர்த்து தான்  அவர் போட்டியிடுகிறார், என்னை எதிர்த்து போட்டியிடுபவர்கள் யாராக இருந்தாலும் களத்தில் தைரியமாக சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பின்னடைவாக உள்ளது என்றும் தமிழ்நாடு தான் முன்னேற்றத்தில் உள்ளது என்றும் இந்தியாவின் பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார் என்றும் இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு திண்டாட்டம் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran