1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ammk generalbody meeting on august 15

ஆகஸ்ட் 15ஆம் தேதி அமமுக பொதுக்குழு: டிடிவி தினகரன் அறிவிப்பு

ttv dinakaran
ஆகஸ்ட் 15ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் அறிவித்துள்ளார்
 
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நல கொள்கைகளை தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் கழகத் துணைத் தலைவர் அன்பழகன் அவர்களின் தலைமையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறும் என டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழுடன் தவறாமல் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
வயதுக்கு மீறிய காதல்.. பேச மறுத்ததால் மாணவி மீது தாக்குதல்! – சென்னையில் பரபரப்பு!