தமிழகத்தில் அம்மா திரையங்கம் எப்போது வரும்? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்


K.N.Vadivel| Last Updated: புதன், 23 செப்டம்பர் 2015 (22:57 IST)
தமிழகத்தில் அம்மா திரையங்கம் விரைவில் அமைக்கப்படும் என தமிழக சட்டசபையில் செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்துள்ளார்.
 
 
தமிழக சட்ட சபையில் கேள்வி நேரத்தின் போது சிபிஎம் எம்.எல்.ஏ.சவுந்தர்ராஜன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் அதிக அளவில் கட்டணங்கள்  வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் அம்மா திரையரங்கம் எப்போது பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என கேள்வி எழுப்பினார்.
 
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, திரையரங்குகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பாளர்கள். அம்மா திரையரங்கம் விரைவில் அமலுக்கு வரும். அப்போது, சாமானிய மக்களின் விருப்பம் நிறைவேறும் என்றார். 
 


இதில் மேலும் படிக்கவும் :