வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 31 அக்டோபர் 2022 (20:19 IST)

சர்தார் வல்லபாய் படேல் முதல் பிரதமராகி இருந்தால்... அமித்ஷா அதிரடி பேச்சு!

Amitshah
சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்தால் இந்தியா பல பிரச்சனைகளை சந்தித்து இருக்காது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று புகழப்படும் சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பதவியேற்றார். சுதந்திர இந்தியாவில் பல குறுநில அரசுகளை அவர் இந்தியாவுடன் இணைத்தார் 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியபோது இந்தியாவின் முதல் பிரதமராக சர்தார் வல்லபாய் படேல் பதவி ஏற்றிருந்தால் இன்று எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை நாடு சந்தித்து இருக்காது என தெரிவித்தார்
 
ஒருவர் மறைந்த பிறகும் நீண்ட காலமாக அவர் நினைவு கூறப்படுகிறார் என்றால் நிச்சயம் அவர் சிறந்தவர் என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் சர்தார் வல்லபாய் படம் புகழ் இந்தியாவின் வரைபடம் இருக்கும் வரை நிலைத்திருக்கும் என்று தெரிவித்தார் 
 
சர்தார் வல்லபாய் மட்டும் இல்லை என்றால் இந்தியாவின் வரைபடம் தற்போது இருக்கும் நிலையில் இருந்திருக்காது என்றும் காஷ்மீர் உள்பட பல பகுதிகளை இந்தியாவுடன் சேர்த்ததில் சேர்த்த பெருமை அவரைச் சாரும் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva