வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 16 அக்டோபர் 2015 (05:31 IST)

தமிழகத்தில் அமேசான் நிறுவனம் நூதன மோசடி: தி. வேல்முருகன் பரபரப்பு குற்றச்சாட்டு

அமேசான் ஆன்லைன் நிறுவனம் நூதன மோசடியில் ஈடுபட்ள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
அமேசான் ஆன்லைன் நிறுவனம் தமிழகத்தில் செய்தித்தாள்களில் ஒரு முழுபக்கம் விளம்பரம் கொடுத்துள்ளது.  அதில் அக்டோபர் 13ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அமேசான் இணையதளம் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தினமும் 1 கிலோ தங்கம் வெல்வதற்கான வாய்ப்பைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது.
 
ஆனால், அமேசான் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.amazon.in - ல் இந்த தங்கம் வெல்லுதல் தொடர்பான அறிவிப்பில், "Note: Residents of the State of TamilNadu are NOT eligible to enter or participate in this Contest" என்று  தெரிவித்துள்ளது.
 
மேலும், இந்தப் போட்டியில் தங்களது நிறுவன பணியாளர்கள், பணியாளர்களின் குடும்பத்தினர் மற்றும்  தமிழக மக்கள் ஆகியோர்  பங்குகொள்ள தகுதியில்லை (Residents of the state of Tamil Nadu) என்று  தெரிவித்துள்ளது.
 
இதில், தமிழகத்தில் செய்தித்தாள்களில் வெளியிட்ட விளம்பரங்களில் இந்த நிபந்தனையை திட்டமிட்டே அமேசான் நிறுவனம் திட்டமிட்டே மறைத்துள்ளது.
 
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவித்துவிட்டு பின்பு, எதற்காக தமிழக ஊடகங்களில் அமேசான் விளம்பரம் செய்ய வேண்டும்?
 
தங்கம் வெல்லலாம் என்ற ஆசையை தமிழக மக்களிடத்தில் தூண்டிவிட்டு தங்களது இணையதளத்தின் மூலமாக பொருட்களை வாங்க வைத்து கடைசியாக உங்களுக்கு தங்கம் இல்லை என ஏமாற்றுவது என்கிற மோசடித்தனமான உள்நோக்கத்துடனேயே அமேசான் நிறுவனம் இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
 
எனவே, அமேசான் நிறுவனத்தின் இந்த நூதன மோசடியில் சிக்கி தமிழர்கள் ஏமாற வேண்டாம். மேலும், இது போன்ற நூதன மோசடியில் ஈடுபட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.