அமலாபால் கார் விவகாரத்தால் அதிர்ச்சியான இஞ்சினியரிங் மாணவர்
நடிகை அமலாபால் வரி ஏய்ப்பு செய்வதற்காக தனது சொந்த மாநிலம் கேரளாவில் காரை பதிவு செய்யாமல், புதுச்சேரியில் பதிவு செய்ததும், இதுகுறித்து விசாரணை நடந்து வருவது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் பலரும் அறியாத ஒரு தகவல் என்னவெனில் புதுச்சேரியில் உள்ள எஞ்சினியரிங் படித்து வரும் மாணவர் ஒருவரின் பெயரில் அமலாபாலின் கார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த மாணவரிடம் விசாரணை செய்தபோது அமலாபால் யார் என்றே தனக்கு தெரியாது என்றும், தன்னுடைய பெயரில் கார் பதிவு செய்ய அவர் தன்னிடம் எந்தவித அனுமதியையும் பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.
கார் வாங்கி கொடுக்கும் ஏஜண்டுக்கள் மற்றும் புரோக்கர்களின் வேலையாக இது இருந்தாலும் இதற்கு அமலாபாலே முழு பொறுப்பு ஏற்கவேண்டிய நிலையில் உள்ளார். எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் உள்ளதாகவும், இதுகுறித்த விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருப்பதாக கூறியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது