விஜயகாந்துடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை: கருணாநிதி தகவல்


Caston| Last Modified திங்கள், 21 மார்ச் 2016 (13:23 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற்று வருவதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

 
 
சென்னையில் அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளார்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், துரைமுருகன் கலந்து கொண்டனர்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் நடந்து வருவதாகவும், விஜயகாந்த் நிச்சயம் திமுக கூட்டணிக்கு வருவார் எனவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் தேமுதிகவுடனான கூட்டணி குறித்த நம்பிக்கையை தான் இழக்கவில்லை எனவும் கூறினார். தேமுதிக கூட்டணி முடிவானதும் தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் கூறினார்.
 
முன்னதாக திமுக உள்ளிட்ட எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை, தான் தனித்து நின்று தேர்தலை சந்திக்க இருப்பதாக விஜயகாந்த் மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இதனையடுத்து தேமுதிகவில் சில சலசலப்புகள் ஏற்பட்டது, இதனால் விஜயகாந்த் தனது முடிவை மாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :