விருத்தாசலத்தில் பாமகவின் 7ஆவது மது ஒழிப்புப் போராட்டம்


K.N.Vadivel| Last Updated: சனி, 8 ஆகஸ்ட் 2015 (04:15 IST)
விருத்தாசலத்தில் அன்புமணி தலைமையில் இன்று மது ஒழிப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
 
 
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் 604 மதுக்கடைகளைச் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றது.
 
கடந்த மார்ச் 31ஆம் தேதி, மதுவுக்கு எதிரான மருத்துவர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற மது ஒழிப்புப் போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம், வேலூர், சேலம், விழுப்புரம், சேலம், கோவில்பட்டி ஆகிய இடங்களில் மது ஒழிப்புப் போராட்டம் நடைபெற்றது.
 
இந்த நிலையில், பாமக சார்பில் 7ஆவது மது ஒழிப்புப் போராட்டம் இன்று (08.08.2015 - (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், பாமக முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் மருத்துவர் அன்புமணி தலைமையில் நடைபெற உள்ளது. 
 


இதில் மேலும் படிக்கவும் :