15 லட்சம் கோடி போச்சு..! – கொரோனாவால் புலம்பும் விமான நிறுவனங்கள்!
கடந்த 2020 முதலாக கொரொனா காரணமாக விமான நிறுவனங்களுக்கு 15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2020 தொடக்கம் முதல் கொரோனா வைரஸ் பரவிய நிலையில் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இதனால் பல நாடுகளில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதுடன் குறைந்த அளவிலான விமான சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதனால் விமான நிறுவனங்கள் உலகம் முழுவதும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அதன் தலைமை இயக்குனர் வில்லி வால்ஷ், கொரோனா காரணமாக கடந்த 2020-2021ல் சர்வதேச விமான சேவையில் ரூ.15 லட்சத்து 7 ஆயிரத்து 500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த இழப்பிலிருந்து மீண்டும் விமான நிறுவனங்கள் மீண்டும் லாபத்தில் இயங்க 2023ம் ஆண்டு வரை ஆகும் என கூறப்பட்டுள்ளது.