1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 நவம்பர் 2025 (13:02 IST)

தமிழகத்தில் முழு நேர டிஜிபி கூட இல்லை.. குற்றவாளிகளுக்கு எப்படி பயம் வரும்: அதிமுக

தமிழகத்தில் முழு நேர டிஜிபி கூட இல்லை.. குற்றவாளிகளுக்கு எப்படி பயம் வரும்: அதிமுக
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக குற்றம் சாட்டிய அதிமுக, மாநில காவல்துறைக்கு முழுநேர டிஜிபி இல்லாதது குறித்தும் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துள்ளது.
 
கோவை கொள்ளை வழக்கில் டிஎஸ்பி மகன் கைது, மற்றும் சென்னை டிஜிபி அலுவலகம் அருகிலேயே வழிப்பறி போன்ற சம்பவங்களை குறிப்பிட்டு, குற்றவாளிகளுக்கு காவல்துறை மீது பயம் இல்லையென்பதைக் காட்டுவதாக அதிமுக தெரிவித்துள்ளது. "முழுநேர டிஜிபி இல்லாத காவல்துறை மீது எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்?" என்று கேள்வி எழுப்பியது.
 
மேலும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரே போக்சோ, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவது, காவல்துறை நிர்வாகம் முற்றிலுமாகச் சீரழிந்துவிட்டதையே காட்டுகிறது என்று அதிமுக சாடியுள்ளது.
 
இந்தச் சட்டம்-ஒழுங்குக் குழப்பத்திற்குக் கவலையற்ற "பொம்மை முதல்வர்" மு.க. ஸ்டாலினே காரணம் என்று குற்றம் சாட்டிய அதிமுக, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை வீழ்த்தித் தமிழகத்தை மீட்போம் என்றும் ஆவேசமாக அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran