ஆட்சி எப்போது கவிழும்? டிடிவி தினகரன் ஆரூடம்
தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக ஆட்சி எப்போது கவிழும் என்பது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவுமான டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வந்தவுடன் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு வரும் என்றும், 110 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவு இருப்பதாக அவர்களே ஒப்புக்கொண்டுள்ளதால் வாக்கெடுப்பின்போது பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஆட்சி கவிழும் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில், மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் வரும் 23-ம் தேதி முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக தினகரன் கட்சியினர் கூறி வருகின்றனர்.