வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 ஜனவரி 2023 (15:27 IST)

கவர்னர் ரவியை அடுத்து அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்: தமிழக அரசியலில் பரபரப்பு

Annamalai
தமிழக கவர்னர் ரவு நேற்று திடீரென டெல்லி சென்ற நிலையில் இன்று அண்ணாமலையும் டெல்லி சென்று இருப்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சட்டமன்றத்தில் கவர்னர் ரவி உரை நிகழ்த்திய போது திடீரென எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன
 
இந்த நிலையில் கவர்னர் ரவி நேற்று டெல்லி சென்று சென்ற நிலையில் இன்று திடீரென பாஜக தலைவர் அண்ணாமலையும் இன்று டெல்லி சென்றுள்ளார் 
 
ஆளுநர் விவகாரம், காயத்ரி ரகுராம் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva