1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 19 செப்டம்பர் 2016 (12:44 IST)

இறந்த ராம்குமாருக்கு ஈ.சி.ஜி. எடுத்தது எதற்கு? வழக்கறிஞர் ராம்ராஜ்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தவிட்டதாவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இறந்தவருக்கு ஈ.சி.ஜி. எடுத்தது எதற்கு? என்று ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

 

 
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தவிட்டதாவும் சிறைத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.
 
இதுகுறித்து ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியதாவது:-
 
ராம்குமார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் மருத்துவமனை குறிப்பிலும், ராம்குமார் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு வந்ததுமே உயிரிழந்துவிட்டதாக உள்ளது. இருப்பினும் உயிரிழந்த ராம்குமாருக்கு மருத்துவமனையில் ஈ.சி.ஜி. எடுக்கப்பட்டுள்ளது. 
 
இறந்த ராம்குமாருக்கு எதற்கு ஈ.சி.ஜி. எடுக்க வேண்டும்? இது தற்கொலை இல்லை. ராம்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார், என்று கூறினார்.