மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்திய அதிமுக தொண்டர்கள் (வீடியோ)
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கோவை பகுதியில் அதிமுக தொண்டர்கள் மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நேற்று இரவு 11.30 மணிக்கு முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு ஏராளமான மக்கள் கூட்டம், கடல் அலை போல் திரண்டுள்ளது. அம்மா, அம்மா என்ற கூரலில் தொண்டர்கள் அழுதுக்கொண்டு இருக்கும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது.
இந்நிலையில் கோவையில் அதிமுக தொண்டர்கள் சிலர் மொட்டை அடித்து அவர்களது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
நன்றி: ANI