1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (18:09 IST)

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.


தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக  அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ.27.50 உயர்த்த பரீசீலிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களில் 301 - 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களில் 501-600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155 உயர்த்த பரிசலிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதங்களில் 601 - 700 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.275 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து தற்போது வெளியான தகவலின் படி, மின்சார வாரியத்தின் கட்டண உயர்வு தொடர்பான மனுவை தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுள்ளது. இந்நிலையில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25 ஆம்  தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.