இணைந்தது அதிமுக அணிகள்: ஒரு தாய் மக்கள் என ஓபிஎஸ் பெருமிதம்!

இணைந்தது அதிமுக அணிகள்: ஒரு தாய் மக்கள் என ஓபிஎஸ் பெருமிதம்!

திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (15:19 IST)
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக அணிகளாக பிளவுபட்டது. சசிகலாவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வந்தார். இதனையடுத்து சசிகலா அணி எடப்பாடி அணியாக மாறியதை அடுத்து ஓபிஎஸ் அணியை மீண்டும் அதிமுகவுடன் இணைக்க முயற்சிகள் நடைபெற்று வந்தது.


 
 
இந்த இணைப்பு பல மாத முயற்சிக்கு பின்னர் தற்போது நடந்துள்ளது. கடந்த சில தினங்களாக அதிமுக அணிகள் இணையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் இன்று காலை இந்த இணைப்பு ஜெட் வேகத்தில் நடந்து வந்தது.
 
காலையில் இருந்து நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்து, தற்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் தற்போது ஒன்றாக அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் ஒன்றாக சேர்ந்துள்ளது.
 
6 மாத கால இடைவெளிக்கு பின்னர் அதிமுக தலைமை கழக அலுவலகத்துக்கு வந்த ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமியுடன் கை குலுக்கு அன்பை பரிமாறிக்கொண்டார். அதன் பின்னர் கூட்டத்தினரிடையே பேசிய ஓபிஎஸ் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என கூறி உரையாற்றி அதிமுகவில் இணைந்தார்.
 
அதன் பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பார். துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமி இருப்பார்.

எல்லாம் காட்டு

கோவை சூலூர் சிறுமி கொலை!.. சிறையில் கார்த்தியை கடுமையாக தாக்கிய கைதிகள்!...

ஆலங்குளம் அரிவாள் வெட்டு!.. சைக்கோ கும்பலின் அதிர்ச்சி பின்னணி!..

திருப்பரங்குன்றம் கோவிலில் கூட்ட நெரிசல்!.. 87 பேர் மயக்கம்..

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா டிரம்ப்?!.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா

தாத்தா விஜய்க்கு ஓட்டு போடுங்க!.. நீதிபதி சுவாமிநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!.

அடுத்த கட்டுரையில்
Show comments