உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவில் விருப்பமனு தொடக்கம்


K.N.Vadivel| Last Updated: சனி, 9 ஜூலை 2016 (11:35 IST)
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் இருந்து அதிமுக சார்பில் விருப்பமனு வாங்கும் பணி தொடங்கியுள்ளது.
 
 
சேலம் மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், நகரம் வாரியாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். விருப்பமுள்ள கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்பமனு வாங்கும் பணி  தொடங்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி பேரூராட்சிகள் மற்றும் வார்டு உறுப்பினருக்கான பதவிகள்,  9 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்பமனு வாங்கும் பணி ஜலகண்டாபுரத்தில் தொடங்கப்பட்டது.
 
ஒன்றிய செயலார் எமரால்டு வெங்கடாஜலம், விருப்பமனுக்களை பெற்றார். முதல் நாளிலேயே, பல்வேறு பதவிகளுக்கு100 க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தனர். இதே போன்று, பனமரத்துப்பட்டி அதிமுக நிர்வாகிகளிடம் மனு வாங்கப்பட்டது. 
 


இதில் மேலும் படிக்கவும் :