திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (20:40 IST)

தொலைக்காட்சி விவாதங்களில் இனி கலந்து கொள்வதில்லை: அதிமுக அதிரடி முடிவு

தொலைக்காட்சி விவாதங்களில் இணைய அதிமுக பங்கேற்காது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மக்களின் அடிப்படைத் தேவைகள், தினசரி பிரச்சனைகள் பல இருக்கின்ற போது அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் ஆக இருக்கக்கூடிய ஊடக நிறுவனங்கள் அதிமுக புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் சிறுமை படுத்தும் நோக்கில் மனம் போன போக்கில் ஊடகத்திற்கு புறம்பாகவும் அதிமுக தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் விவாத தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது உள்ளபடியே மனதிற்கு வேதனை தருகிறது
 
இதனால் ஊடகங்களில் அதிமுக கழக நிர்வாகிகள் செய்தி தொடர்பாளர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது