1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 9 ஏப்ரல் 2017 (10:59 IST)

அடுத்து ரெய்டு ஆப்பு இவர்களுக்கு தான்: வருமான வரி துறையினர் அதிரடி; பீதியில் அதிமுகவினர்!!

அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடர்ந்து 12 தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் வருமான வரி சோதனையில் சிக்க உள்ளனர்.


 

 
ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்கள் தங்கள் அணிக்கு ஓட்டு போட பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கியது. இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் விக்ரம் பத்ரா அறிக்கை தாக்கல் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், தமிழக அமைச்சர்கள் 12 பேர் வருமான வரி துறையின் கண்காணிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரையும் வருமான வரித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 
 
இதனால் யார் வீட்டிற்குள் எப்போது ரெட்டு நடக்குமோ என்ற பயத்தில் அதிமுகவினர் உள்ளனர் என செய்திகள் வெளியாகி வருகின்றன.