கூடுவாஞ்சேரி அருகே அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை

Murder
வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified வியாழன், 28 மே 2015 (16:17 IST)
கூடுவாஞ்சேரி அருகே உள்ள மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற 12வது வார்டு அதிமுக கவுன்சிலர் கிருஷ்ணராஜ் (50). சுவாமி விவேகானந்த நகர் பகுதி அதிமுக கிளைசெயலாளராகவும் இருந்தார்.
 
 
இவர் இன்று காலை 10.30 மணிக்கு மண்ணிவாக்கம் அண்ணா நகர் பகுதியில் ஏரியை ஆழப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மண்ணிவாக்கம் கூட்டுரோடு பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் கவுன்சிலர் கிருஷ்ணராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
 
தகவல் அறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கிருஷ்ணராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
 
கிருஷ்ணராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அந்த தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட கிருஷ்ணராஜுக்கு இந்துமதி என்ற மனைவியும், ஸ்வேதா, வைஷாலி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :