அதிமுக வேட்பாளர் பட்டியல் மீண்டும் மாற்றம்: 10 வேட்பாளர்களை மாற்றி ஜெயலலிதா அதிரடி


Caston| Last Modified புதன், 6 ஏப்ரல் 2016 (15:08 IST)
நேற்று முந்தினம் (04/04/2016) 234 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

 
 
234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் அதிமுகவும், மீதமுள்ள 7 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்த வேட்பாளர் பட்டியலில் பல அமைச்சர்கள் மற்றும் கடந்த தேர்தலில் போட்டியிட்ட பலருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
 
ஜெயலலிதா வெளியிட்ட இந்த வேட்பாளர் பட்டியலை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றுவார் என பலர் பேசி வந்தனர். இதனையடுத்து அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் நேற்று திடீரென மாற்றம் செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் மீண்டும் 10 அதிமுக வேட்பாளர்களை மீண்டும் மாற்றி ஜெயலலிதா அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
 
புதியதாக சேர்க்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள்:
 
2. மேட்டூர் - செ. செம்மலை
 
2. வேதாரண்யம் - ஓ.எஸ். மணியன்
 
3. காட்டுமன்னார்கோவில் - முருகுமாறன்
 
4. பூம்புகார் - எஸ். பவுன்ராஜ்
 
5. மன்னார்குடி - எஸ். காமராஜ்
 
6. தியாகராயநகர் - பி. சத்தியநாராணயன்
 
7. நாகர்கோவில் - ஏ. நாஞ்சில் முருகேசன்
 
8. திருபுவனை - சங்கர்
 
9. திருநள்ளார் - முருகையன்
 
10. காரைக்கால் தெற்கு தொகுதி - அசனா

 
 


இதில் மேலும் படிக்கவும் :