வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2016 (10:28 IST)

அதிமுக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்: ஜெயலலிதா அதிரடி

நேற்று முந்தினம் (04/04/2016) 234 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.


 
 
கூட்டணி குழப்பம், தொகுதி பங்கீடு குழப்பம், உட்கட்சி மோதல் என மற்ற அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில், அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் களத்தை சூடுபிடிக்க வைத்தது.
 
234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் அதிமுகவும், மீதமுள்ள 7 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்த வேட்பாளர் பட்டியலில் பல அமைச்சர்கள் மற்றும் கடந்த தேர்தலில் போட்டியிட்ட பலருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
 
இந்நிலையில் ஜெயலலிதா வெளியிட்ட இந்த வேட்பாளர் பட்டியலை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றுவார் என பலர் பேசி வந்தனர். இதனையடுத்து அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 
முதலில் ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக முத்துராஜா அறிவிக்கப்பட்டார். பின்னர் நேற்று மாலை திடீரென இதனை மாற்றம் செய்து அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.