வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:54 IST)

மணிகண்டன் விஷமருந்தியதால் தான் உயிரிழந்தார்: ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம்!

முதுகுளத்தூரில் கல்லூரி மாணவன் மணிகண்டன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
இந்த நிலையில் இது குறித்து ஏடிஜிபி தாமரைக்கண்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். முதுகுளத்தூரில் கல்லூரி மாணவன் மணிகண்டன் இறப்பில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் அவர் போலீசார் அடித்து இறக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் விசாரணைக்கு பின்னர் அவர் விஷம் அருந்தியே உயிரிழந்தார் என்றும் முதுகுளத்தூர் இளைஞர் மணிகண்ட மரணம் குறித்து ஏடிஜிபி தாமரைக்கண்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்
 
இந்த விளக்கத்தை அடுத்து மணிகண்டன் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்