விஜய் சைக்கிளில் வந்ததைப் பற்றி கதைக் கட்டாதீர்கள்!

Last Modified செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (12:47 IST)

நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தியது குறித்து குஷ்பு பேசியுள்ளார்.

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னையில் உள்ள திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்கு சாவடிகளில் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
விஜய் நீலாங்கரையில்
உள்ள வாக்குச்சாவடிக்கு
வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு வந்து ஓட்டளித்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். விஜய் சைக்கிளில் வந்ததற்கும் ஒரு அரசியல் உள்நோக்கம் உள்ளது என பேசப்படும் இநேரத்தில் அதற்கான காரணம் என்னெவனில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிரொலிக்கும் விதமாக நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்ததாக அவரது ரசிகர்கள் இணையத்தில் கருத்து பரப்பி வருகின்றனர்.


இதுகுறித்து பேசியுள்ள நடிகையும் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளருமான குஷ்பு ‘விஜய் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று வீட்டுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடி
உள்ளதால் சைக்கிளில் வந்திருப்பார். அதைப் பற்றி கதைக் கட்ட வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :