ஜூலியோடு சசிகலாவை சேர்த்து மீம்ஸ் போட்ட ஆர்த்தி...
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நகைச்சுவை நடிகை ஆர்த்தி, ஜூலி மற்றும் சசிகலா ஆகியோர் பற்றி கிண்டலடிக்கும் வகையில் மீம்ஸ் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டவர் ஆர்த்தி. ஆனால், அங்கு அவருக்கு எமனாக நின்றார் ஜூலி. ஜூலியின் நடவடிக்கைகள் ஆர்த்திக்கு பிடிக்காமல் போக, அவரிடம் அடிக்கடி சண்டை போட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஜூலி அழுது வடிந்து, ரசிகர்களின் ஆதரவை பெற்றார். ரசிகர்களின் வெறுப்பு ஆர்த்தி பக்கம் திரும்ப, அவர் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி நடிக்கிறார். நான் உண்மையாக இருக்கிறேன் என தொடர்ந்து கூறி வந்தார் ஆர்த்தி. கடைசியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது கூட கட்டிப் பிடிக்க வந்த ஜூலியிடம், ‘ இப்போதாவது நடிக்காமல் இருமா’ என கூறிவிட்டுதான் வெளியே வந்தார்.
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில், ஒரு மீம்ஸ் ஒன்றை அவர் பதிவு செய்துள்ளார். அதில், அக்கா.. அக்கானு சொல்லி தமிழ்நாட்டை ஏமாத்துறது இரண்டு பேர் எனக்குறிப்பிட்டு, அதில் ஜூலி மற்றும் சசிகலா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.
நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பின்பும், ஜூலியின் மீதான கோபம் அவருக்கு தீரவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.