வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 ஜூன் 2019 (20:41 IST)

தண்ணீர் பஞ்சம்: கோடியில் சம்பளம் வாங்கும் ஹீரோக்களுக்கு ஜாக்குவார் தங்கம் வேண்டுகோள்

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் தண்ணீர்ப்பஞ்சம் உள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தபோதிலும் முறையான மழைநீர் சேகரிப்பு இல்லாதது, ஏரிகள் உள்பட நீர்நிலைகள் தூர் வாரப்படாதது ஆகியவற்றால் தான் இந்த தண்ணீர்ப்பஞ்சம் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் தண்ணீருக்கு என ஒரு பெரிய தொகையை சென்னை உள்பட தமிழக மக்கள் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளதால் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க பெரும் பணக்காரர்கள் முன்வர வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
 
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக ரஜினியின் அறிவுறுத்தலின்படி லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக அளித்து வருகின்றனர். 
 
அதேபோல் தமிழ் சினிமாவில் 40 கோடி, 50 கோடி என பல கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்கள், தயவு செய்து தமிழக தண்ணீர் பஞ்சம் தீர்க்க உதவி செய்ய வேண்டும் என்று ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் எம்ஜிஆர் மக்களுக்காக வாழ்ந்தவர் என்றும், அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் முடிந்த அளவு முன்னணி ஹீரோக்கள் உதவுங்கள் என்றும் ஜாக்குவார் தங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.